ராஜஸ்தான் ஆளுநர் கல்யான் சிங், மார்ச் 23ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்’ என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனையடுத்து தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆளுநர் கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
நடுநிலையாக செயல்பட வேண்டிய ஆளுநர், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று கூறியிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.