ராஜஸ்தானில் இருந்து டேஹ்ராடூன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிப்பவர், திவ்யன்ஷ் பன்சால். இவர், எக்ஸ்-ரே மூலமாக, 5 நிமிடங்களில் ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனையை செய்ய, புதிய மென்பொருளை வடிவமைத்துள்ளார். அஜ்மீர் மாவட்டம், தேஜா சவுக் பகுதியைச் சேர்ந்த பன்சால், தனது இரு நண்பர்களுடன் இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து பன்சால் கூறும்போது, 'இந்த மென்பொருளை வடிவமைத்ததன் நோக்கம், கோவிட் -19 பரிசோதனையின் செலவுகளைக் குறைப்பது மட்டுமல்ல, மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் தான். இந்த மென்பொருள் கரோனாவை மட்டுமல்ல, நிமோனியாவையும் கண்டறியும் திறன் கொண்டது. அரசு இதனை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில், இலவசமாகவே பயன்படுத்தத் தருவேன்', என்றார்.
இந்த மென்பொருள் மூலம் கரோனாவைக் கண்டறிவது எளிதானது, பாதுகாப்பானதும்கூட. இதில், பாதிக்கப்பட்டவரின் எக்ஸ்-ரே ஸ்கேன் ஒளிப்படத்தை பதிவேற்றுவதன் மூலம், கரோனா பரிசோதனை முடிவுகளை விரைவாகப் பெறலாம்.
இதையும் படிங்க: ஜூம் செயலியை ஓரம்கட்டும் சமூகவலைதள அரசன்!