ஜெய்ப்பூர்: பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ டிராக்டரில் சட்டப்பேரவைக்கு வந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் பமான்வாஸ் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ இந்திரா மீனா. இவர் இன்று சட்டப்பேரவைக்கு டிராக்டரில் சென்றார். இந்நிலையில், சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவேன்.
என்னுடைய ஆதரவு விவசாயிகளுக்கு என்றும் உண்டு. மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராக நடக்கிறது. நான் அவர்களுக்கு ஆதரவாக என்றென்றும் நிற்பேன். விவசாய நலன் காக்கப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: #MeToo எம்ஜே அக்பர் அவதூறு வழக்கில் பிப்.17 தீர்ப்பு!