ETV Bharat / bharat

கரோனாவை தொடர்ந்து மகாராஷ்டிரா சந்தித்திருக்கும் அடுத்த பேரிடர்! - மகாராஷ்டிராவில் தொடரும் கன மழை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவிட்-19 தொடர்ந்து மகாராஷ்டிரா சந்தித்திருக்கும் அடுத்த பேரிடர் !

author img

By

Published : Jul 5, 2020, 9:54 PM IST

இது தொடர்பாக மும்பை ஐஎம்டி துணை இயக்குநர் ஜெனரல் கே.சோசாலிகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், நாசிக், புனே போன்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை தெற்கு புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் 12 மணி நேரத்தில் 74.6 மிமீ மழையும், மேற்கு மும்பையில் 132.2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

கடந்த 12 மணி நேரங்களில் மும்பை, என்.எம் (நவி மும்பை), தானே பகுதிகளில் (மழைப்பொழிவு) மிகத் தீவிர மழை பதிவாகியுள்ளது. தானேவில் 200 மி.மீ., மழையும், போரிவாலியில் 170 மி.மீ., மழையும், மும்பை நகரத்தில் 70 - 80 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஹர்னாயில் 52.6 மி.மீ மழை பெய்துள்ளது. மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் 9.6 மி.மீ மழை பெய்தது. கோலாப்பூரில் 3 மி.மீ மழை பெய்தது" என கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.