ETV Bharat / bharat

தெலங்கானாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத் - தெலங்கானாவில் கனமழை

ஹைதராபாத்: தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்துவருகின்றன.

தெலங்கானாவில் கனமழை
தெலங்கானாவில் கனமழை
author img

By

Published : Oct 14, 2020, 4:10 PM IST

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமாக மாறி ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதியான காக்கிநாடாவில் நேற்று கரையை கடந்தது. காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில், 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பலத்த மழை பெய்துவருகிறது.

இதன் காரணமாக தெலங்கானாவில் மட்டும் இதுவரை, 15 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்துவருகின்றன. பல இடங்களில் வீடு இடிந்து விழுந்ததுள்ளது. இதற்கிடையே, தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு அக்டோபர் 15, 16 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவித்து மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தெலங்கானாவில் கனமழை

அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.டி. ராமாராவ், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் தளசானி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் ஹைதராபாத்தில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் குறித்து மூத்த அலுவலர்களிடம் அவசர ஆலோசனை நடத்தினர்.

தெலங்கானாவில் கனமழை

இதையும் படிங்க: பாஜக முன்னாள் எம்.பி., மீதான பாலியல் வழக்கை திரும்ப பெற்ற சட்டக்கல்லூரி மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.