இந்திய ரயில்வே, கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனத்துக்கு கான்பூர்- தீன் தயால் உபத்யாய் ரயில்வே பிரிவில், 417 கி.மீ., தொலைவிலான ரயில்வே வழித்தடத்தில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 471 கோடி ஆகும்.
இதுகுறித்து இந்திய ரயில்வே கூறுகையில், "ஒப்பந்தத்தின்படி 2019ஆம் ஆண்டுக்குள் சீன நிறுவனம் பணியை முடித்திருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை 20 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. எனவே, சீன நிறுவனத்தின் வேலையில் திருப்தி இல்லாத காரணத்தினால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக" அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்திய - சீன எல்லைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சீன பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.