மத்திய அரசு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியாக. 109 வழித்தடங்களில் 151 ரயில்களை தனியாருக்கு விட முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இம்முடிவை கைவிடக்கோரி, புதுச்சேரியில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவரிசையில், (ஜூலை.16) புதுச்சேரி ரயில் நிலையம் எதிரில், சிஐடியு புதுச்சேரி யூனியன் பிரதேசக்குழு தலைவர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் சீனுவாசன் பிரபுராஜ், சுகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
முன்னதாக, முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து கோரிக்கைகள் அடங்கியப் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.