மத்திய டெல்லியில் உள்ள இந்திய ரயில்வேயின் தலைமையகமான ரயில் பவனில் பணியாற்றும் ஆர்.பி.எஃப். பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, ரயில் பவன் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
ரயில் பவனின் நான்காவது மாடியில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) இயக்குநர் ஜெனரல் அருண்குமார் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றிய ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர் ஏற்கனவே கடந்த மே 6ஆம் தேதிமுதல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து ரயில்வே அமைச்சகத்தின் உத்தரவின்படி, இன்றும், நாளையும் என இரண்டு நாள்களுக்கு ரயில் பவன் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்தக் கட்டடத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது.
![ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7185292_r.jpg)
தலைநகர் டெல்லியில் இதுவரை ஏழாயிரத்து 998 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்து 858 பேர் குணமடைந்துள்ள நிலையில், 106 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:ஊரடங்கு தளர்வு: டெல்லி முதலமைச்சருக்கு குவியும் மக்களின் ஆலோசனைகள்!