ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தொடர் தீ விபத்துகளைத் தொடர்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அமலாபுரம் வருவாய் கோட்ட அலுவலர் பவானி சங்கர், காவல் துறையினர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அன்று சோதனைகள் மேற்கொண்டனர்.
இதில், விதிமுறைகளை மீறி நடத்திவந்த இரண்டு பட்டாசு ஆலைகளில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். விதிகளையும் விதிமுறைகளையும் மீறும் பட்டாசு ஆலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டாசுகள் உற்பத்தி குறைவு - 3 முதல் 5 சதவிகித விலையேற்றம்