ETV Bharat / bharat

குடியரசுத் தலைவரிடம் மனு வழங்கும் ராகுல் காந்தி!

டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2 கோடி பேரிடம் பெற்ற கையெழுத்தை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்குகிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Dec 24, 2020, 12:19 PM IST

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியின் எல்லையில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இந்தப் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் இருந்து, வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 2 கோடி பேரிடம் காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து பெற்றுள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் தலையிட்டு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரும் மனுவை காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ளது. இந்த மனுவை ராகுல் காந்தி அக்கட்சியின் எம்பிக்களுடன் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்குகிறார்.

டெல்லி விஜய் சவுக் பகுதியிலிருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்பின் காங்கிரஸ் எம்பிக்களின் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு காங்கிரஸ் கட்சி தலைமையகம் அமைந்துள்ள விஜய் சவுக் பகுதியிலிருந்து ராஷ்டிரபதி பவன் வரை சென்று குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு அணிவகுப்புக்கு டெல்லி காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை, டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, இதுவரை ஐந்துகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதையும் படிங்க: லாரி கொண்டு செல்லப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையொப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.