ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ராகுல் பேரணி - விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி நடைபெறவுள்ள பேரணியை அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தலைமை தாங்குகிறார்.

Rahul Gandhi to lead Congress MPs' protest march against farm laws

author img

By

Published : Dec 24, 2020, 10:28 AM IST

டெல்லி: மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் டெல்லியை இணைக்கும் நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு கடந்த நவம்பர் 26ஆம் தேதியிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் இதுவரை நடைபெற்ற அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், மத்திய அரசு வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

இதற்கிடையில், சுமார் ஒருமாத காலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (டிச. 24) குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிப் பேரணி நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணி விஜய் சவுக்கிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் காங்கிரஸ் எம்பிக்கள் கலந்துகொள்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காங்கிரஸ் எம்பிக்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து வேளாண் சட்டங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றினையும், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திய இரண்டு கோடி பேரின் கையெழுத்தையும் வழங்கவுள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி சீக்கியர்களை நேசிப்பது உண்மையென்றால் விவசாயிகள் போராட வேண்டிய அவசியமில்லை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.