நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவி ஆட்சி இழந்தது. இதற்கு அடுத்தப்படியாக நடக்கும் தேர்தல்களில் கட்டாயமாக வெற்றப்பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் காங்கிரஸ் உள்ளதால் அக்கட்சி முனைப்போடு செயல்பட்டுவருகிறது.
அதன் ஒரு பங்காக ஹரியானாவில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரபரப்புரையில் ஈடுபடுவேரின் நட்சத்திர பரப்புரையாளர்கள் என ஒரு பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் முதலமைச்சர்களான அம்ரிந்தர் சிங், அசோக் கெலாட், புபேஷ் பாகல், கமல் நாத் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் சமீபத்தில் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி அதிகமாக ஊழலில் ஈடுபட்டு வருகிறுது என்று குற்றம்சாட்டி, கட்சியின் அனைத்து முக்கிய பொறுப்புகளிலிருந்தும் விலகிய அம்மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரான அசோக் தன்வர் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: வேலையின்மை குறித்து மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி