ETV Bharat / bharat

சக்தியின் மறு உருவம் இந்திரா- ராகுல் புகழாரம் - இந்தியாவின் இரும்புப் பெண்மனி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தன்னுடைய பாட்டியும், மறைந்த பிரதமருமான இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Rahul Gandhi pays tribute to Indira Gandhi on her birth anniversary

author img

By

Published : Nov 19, 2020, 11:47 AM IST

டெல்லி: இந்தியாவின் இரும்புப் பெண்மனி என அழைக்கப்படும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 103ஆவது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படடுகிறது.

இதையொட்டி, இந்திரா காந்தியின் நினைவிடமான சக்தி ஸ்தலாவில் காங்கிரஸ் எம்பியும், இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திரா காந்தியின் புகைப்படத்தைப் பதிவிட்டு இந்தியாவின் திறமையான பிரதமர் எனப் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, சக்தியின் மறு உருவம் அவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

"இந்திரா காந்தியின் பிறந்த நாளில் நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் திறமையான பிரதமராகவும், சக்தியின் மறு உருமாகவும் திகழ்ந்தவர். நாடு முழுவதும் இன்றும் அவர் ஈர்க்கத்தக்க தலைவராகவே கருதப்படுகிறார். ஒரு பாட்டியாக எப்பொழுதும் அவர் எனது நினைவில் இருப்பார். அவர் எனக்குக் கற்பித்த விஷயங்கள் ஒவ்வொரு நாளும் என்னை ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்ய தூண்டுகின்றன" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"இந்திரா காந்தி இந்திய நாட்டின் முன்னோடி. தொலைநோக்குப்பார்வை கொண்ட அவரால் இந்தியா மகத்துவத்தையும் பல்வேறு செழிப்புகளையும் பெற்றுள்ளது. அவர் இந்தியாவிற்கான பிரதமராக மட்டும் செயலாற்றவில்லை. அவரது தேடலால் இந்தியா வலிமைப் பெற்றுள்ளது. அவரை போற்றுவதில் இந்தியா பெருமை கொள்ளும்" என காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திரா காந்தி பிறந்த நாளில் பெண்கள் சுகாதார திட்டத்தை தொடங்கிய முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.