சமூக வலைதளங்களில் தகவல்களை ஆடியோ வடிவில் கேட்க உதவும், நவீன உலக டிஜிட்டல் வானொலி 'பாட்காஸ்ட்' என்று கூறப்படும் 'வலையொளி' ஆகும். காங்கிரஸ் கட்சி, தற்போது வலையொளி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
இந்த முடிவானது, அக்கட்சியின் சமூக வலைதளத்தில் 'இந்தியர்களே பேசுங்கள்' என்ற தலைப்பில் விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னை குறித்து பேசும் ஒரு பொது மேடையை உருவாக்கியது. அது நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 57 லட்சம் பேர், இதற்கான காணொலிகளை அதில் பதிவிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, இந்த கரோனா ஊரடங்கில் ராகுல் காந்தி தொடங்கி யூ-டியூப் சேனலுக்கு 2 லட்சத்து 96 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். அதில் ராகுல் காந்தி, பொருளாதார நிபுணர்கள், மருத்துவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோருடன் நடத்திய உரையாடல்களின் வீடியோக்களைப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அரசை விமர்சிக்கும் விவசாயிகள்!