ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் ராகுல்

author img

By

Published : Dec 5, 2020, 12:19 PM IST

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Rahul Gandhi hits out at Centre over MSP, APMC, urges people to support farmers

டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவற்றைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் பத்தாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்களது போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்ததையடுத்து, மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழைப்புவிடுத்தது. அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியைச் சந்தித்ததால் போராட்டம் தீவிரமடைந்தது.

இதற்கிடையில், இந்த வாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் விவசாயிகள் மூன்று முறை வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த அனைத்து பேச்சுவார்த்தைகளுமே தோல்வியையே சந்தித்தன.

இந்நிலையில், விவசாயிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். மேலும், வரும் எட்டாம் தேதி விவசாயிகள் நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் பொருள்கள் விற்பனை சந்தை ஆகியவை தொடர்பான மத்திய அரசின் முடிவை கடுமையாகச் சாடினார்.

பிகாரில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட இயலாத காரணத்தால் விவசாயிகள் அனைவரும் கடும் துயரங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் மோடியை குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து, மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும். அவர்களது போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் - டில்ஜித் தோசஞ் உடன் கைகோர்த்து கங்கனாவை சாடும் மிகா சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.