ETV Bharat / bharat

விவசாயிகளின் வருமானத்தை குறைக்கும் மத்திய அரசு - ராகுல் காந்தி

டெல்லி: பிகார் விவசாயிகளின் வருமானத்திற்கு இணையாக மற்ற மாநில விவசாயிகளின் வருமானத்தை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
author img

By

Published : Dec 12, 2020, 7:16 AM IST

நாட்டிலேயே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தான் அதிகப்பட்சமான வருமானத்தை ஈட்டிவருவதாக சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆண்டுக்கு, 2,16,708 ரூபாயை வருமானமாக ஈட்டுகின்றனர்.

அதேபோல், பிகார் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் நாட்டிலேயே குறைந்தபட்சமாக 42,684 ரூபாயை வருமானமாக ஈட்டிவருகின்றனர். இதுகுறித்த செய்தியை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, பிகார் விவசாயிகளின் வருமானத்திற்கு இணையாக மற்ற மாநில விவசாயிகளின் வருமானத்தை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.‘

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பஞ்சாப் விவசாயிகள் போல் வருமானத்தை ஈட்ட மற்ற மாநில விவசாயிகள் விரும்புகின்றனர். ஆனால், பிகார் விவசாயிகளின் வருமானத்திற்கு இணையாக மற்ற மாநில விவசாயிகளின் வருமானத்தை குறைக்க மத்திய அரசு விரும்புகிறது" என பதிவிட்டுள்ளார்.

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் குறையும் என காங்கிரஸ் விமர்சித்துவருகிறது. குறைந்த பட்ச ஆதார விலை, விவசாய உற்பத்தி சந்தை குழு ஆகியவற்றை வேளாண் சட்டங்கள் முடிவுக்கு கொண்டு வந்துவிடும் எனவும் அக்கட்சி விமர்சித்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.