கிழக்கு லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வரும் நிலையில், அது குறித்து பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்தியாவிற்குச் சொந்தமான 1,200 கி.மீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது தொகுதியான வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "எல்லையில் நிலவும் பதட்டங்களில் மக்கள் கவனம் குவிவதை பிரதமர் மோடி விரும்பவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் பிரதமர் 'சீனா' என்ற வார்த்தை பயன்படுத்தியதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஏனென்றால் எல்லை பிரச்னையில் மக்களின் கவனம் இருக்ககூடாது என பிரதமர் விரும்புகிறார். நம்முடைய நிலத்தில் இருந்து சீனா ஆக்கிரமிப்புகளையும், துருப்புகளையும் எப்போது அகற்றப்போகிறீர்கள்? இதைவிட பெரிய பிரச்னை எதுவும் இருக்கிறது என நீங்கள் கருதுகிறீர்களா? பாரத மாதாவின் (இந்தியா) நிலத்தை சீனா ஆக்கிரமித்தது குறித்து பிரதமர் பேசாதது விசித்திரமாக இருக்கிறது" என்றார்.
கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரு நாடுகளும் பல கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளன. மூத்த ராணுவ அலுவலர்கள் அளவிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அக்டோபர் 12 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், உண்மையான எல்லை கட்டுப்பாடு பகுதி குறித்து இருதரப்பிலும் ஆழமான கருத்துகள் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிலைமை கருத்தில் கொண்டு உயரமான மலைப் பிரதேசங்களில் இந்தியா நீண்ட காலத்திற்கு தனது துருப்புகளை நிறுத்த தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு