ETV Bharat / bharat

50இல் அடியெடுத்து வைக்கும் ராகுல்: ராணுவ வீரர்கள் உயிர் தியாகத்திற்காக கொண்டாட்டம் இல்லை!

author img

By

Published : Jun 19, 2020, 1:42 PM IST

டெல்லி: எல்லையில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்திற்காக 50ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பிறந்தநாளைக் கட்சித் தொண்டர்கள் கொண்டாட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

50இல் அடியெடுத்து வைக்கும் ராகுல் காந்தி: ராணுவ வீரர்கள் உயிர் தியாகத்திற்காக கொண்டாட்டம் இல்லை!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது 50ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து எல்லையில் உயிரிழந்த 20 ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்திற்காக தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என கட்சித் தொண்டர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, அனைத்து மாநில, மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதமான கொண்டாட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்களும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து ஆதரவு அளிக்கலாம். முக்கியமாக ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி அவர்களின் துயரத்தைத் துடைக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு நாடு தழுவிய ரத்த தானம் நடத்துமாறும், தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குமாறும் கே.சி. வேணுகோபால் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க...கரோனா காலத்தில் சூரிய கிரகணம் எப்படி இருக்கும்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.