ETV Bharat / bharat

அமெரிக்கத் தேர்தலில் இனவாதம் முக்கியத்துவம் பெறுகிறதா?

author img

By

Published : Aug 26, 2020, 9:55 PM IST

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தலில் இனப்பிரச்னையின் தாக்கம் குறித்து நிபுணர்களிடம் மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/26-August-2020/8569168_105_8569168_1598456136151.png

ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா தனது ‘ஐடென்டிடி’ என்ற நூலில், ‘புலம்பெயர்ந்து வரும் வகுப்பினரும் இனத்தவரும் அதிக அளவில் குடியுரிமை பெறுவதே, குடியரசுக் கட்சிக்கு அமெரிக்கர்கள் வாக்களிப்பதற்கான முக்கியக் காரணம்’ என்று வாதிடுகிறார். இதற்கு, ஹஜ்னால், அப்ராஜானோ ஆகிய அரசியல் அறிவியலாளர்களின் தகவல் திரட்டை அவர் மேற்கோள்காட்டியுள்ளார்.

“1960-களின் குடியுரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை ஜனநாயகக் கட்சி தனக்குள் அரவணைத்துக் கொண்டதே, தெற்கில் உள்ளவர்களை குடியரசுக் கட்சியைத் தீவிரமாக ஆதரிக்க வழிவகுத்தது; தற்போது, புலம்பெயர்ந்து வருவோரின் குடியுரிமை அதேபோன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டினர் மற்றும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்ப்பதே டொனால்டு டிரம்ப்பின் தேர்தல் பிரசாரத்தின் மையக் கருத்தாக விளங்கியதுடன், அவர் அதிபராக ஆவதற்கும் வழிவகுத்தது.” ஃபுகுயாமா தனது நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 132)

தற்போது, நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பிரசாரத்தில் குடியுரிமைப் பிரச்சனை மற்றும் இனவாதப் பிரச்சனை ஆகிய இரண்டையும் முன்னிறுத்தி டிரம்ப் தன்னை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு வாக்குச் சேகரிப்பதே, தேர்தல் விவாதத்தின் மையப் பொருளாக விளங்குகிறது. குடியரசுக் கட்சியினுடைய தேசிய மாநாட்டின் முதல் நாளின்போது, அமெரிக்க துணை அதிபருக்கான தேர்தலில் முதலாவது கருப்பினப் பெண் வேட்பாளரான (ஜனநாயகக் கட்சியின்) கமலா ஹாரிஸை எதிர்த்து, ஐ.நா. சபைக்கான அமெரிக்க முன்னாள் தூதரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே தான் கடுமையாக விமர்சித்தார். ஹாலே, ஹாரிஸ் ஆகிய இருவருமே புலம்பெயர்ந்து வந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் என்பதுடன் இந்திய வம்சாவளியையும் சேர்ந்தவர்கள்.

“அமெரிக்காவில் இனவாதம் தலைதூக்கியிருப்பதாகக் கூறுவது, ஜனநாயகக் கட்சியில் பலருக்கும் இப்போது ஒரு வழக்கமாகி விட்டது. அமெரிக்கா ஒரு இனவாத நாடு அல்ல. இது எனக்குச் சொந்தமானது. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் பெருமைக்குரிய மகள் நான்” என்றார் ஹாலே. குழுமியிருந்த பிரதிநிதிகளிடம் தனது தந்தை தலைப்பாகை அணிந்ததையும், தனது தாயார் சேலை அணிந்ததையும் நினைவுகூர்ந்தார். “அமெரிக்க வரலாறு என்பதே முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து உழைப்பது என்பதுதான். அந்த வகையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தைக் கட்டமைப்பதுடன், அமெரிக்காவை அனைவருக்கும் மேலும் சுதந்திரமானதாக, நியாயமானதாக, சிறந்ததாக உருவாக்குவதற்கான தருணம் இது. ஆகையால்தான், கலவரங்கள் மற்றும் இழிவுகளைப் பொருத்தவரை ஜனநாயகக் கட்சி பாராமுகமாக இருப்பதைக் காணும்போது துயரம் மேலிடுகிறது” என்று ஹாலே மேலும் கூறினார்.

மூத்த செய்தியாளர் ஸ்மிதா சர்மா கந்துரையாடல்

ஆக, அமெரிக்கா இனவாத நாடா? 2020 தேர்தலில், அமைப்பு ரீதியிலான இனவாதப் பிரச்சனை, சமூக மற்றும் அரசியல் தீர்ப்பை எழுதப் போகிறதா? இனவாதப் பிரச்சனை தொடர்பாக, “பேட்டில்கிரவுண்ட் யுஎஸ்ஏ 2020” (அமெரிக்கத் தேர்தல் களம் 2020) நிகழ்ச்சியின் இரண்டாவது அத்தியாயத்தில், அமெரிக்காவின் இரண்டு முக்கிய நிபுணர்களுடன், மூத்த இதழியலாளர் ஸ்மிதா சர்மா விவாதிக்கிறார்.

சமூகவியல் பேராசிரியரும், வெறுப்புக் குற்றவியல் ஆய்வாளரும், கதை எழுத்தாளருமான டாக்டர் ராண்டல் ப்ளாஸக், அமெரிக்காவில் இனவாதப் பிரச்சனைகள் தொடர்பாக தேசிய அளவிலான மதிப்பீடு நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். “அமெரிக்காவில் இனப் பிரச்சனையைக் கையாளுவதில் மிகக் குறைவாகவே நாம் செயல்பட்டுள்ளோம். அமைப்பு ரீதியிலான இனவாதத்துக்கு பல நூற்றாண்டுகளாகவே தீர்வு காணப்படவில்லை. ஆகையால், 2020-இல் விவாதம் உண்மையில் வேறு பிரச்சனைக்கு மாறியது, கரோனா தொற்று நோய் குறித்துக்கூட முக்கியமாகப் பேசப்பட்டது. ஆயினும் இனப் பிரச்சனை தொடர்பான விவாதம் இறுதியில் முன்னிலைக்கு வந்துவிட்டது. இவ்வாறு நிகழ்ந்ததற்கு, இனப் பிரச்சனையை நாம் எவ்விதம் எதிர்கொள்வது என வெள்ளை இனத்து மக்கள் பேசத் தொடங்கியதே காரணம்” என்றார் டாக்டர் ப்ளாஸக். வெள்ளையின மக்களின் மேலாதிக்கத்துக்குப் பெயர் பெற்ற ஓரேகான் மாகாணத்தின் போர்ட்லாண்டில் இருந்து அவர் இவ்விதம் கூறினார்.

அமெரிக்கா இனவாத நாடு அல்ல என்று நிக்கி ஹாலே வாதிடுகின்ற அதே வேளையில், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள், விக்ஸான்ஸினில் உள்ள கெனோஷா நகரத் தெருக்களில் கலவரத்தை அடக்கவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். ஜேக்கப் ப்ளேக் என்ற 29 வயது கருப்பின இளைஞர், அவரது மூன்று இளம் குழந்தைகளின் கண்களுக்கு முன்பாகவே வெள்ளையின காவல்துறை அலுவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவமே, தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தூண்டி விட்டது.

பின்னர் அந்த வெள்ளையின காவல்துறை அலுவர்கள் நிர்வாக ரீதியிலான விடுப்பில் அனுப்பப் பட்டனர். துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து காயமடைந்த ப்ளேக் உயிர் பிழைத்துவிட்ட போதிலும், இந்தச் சம்பவம், “கருப்பின மக்களை வாழவிடுங்கள்” (பிளாக்லைவ்ஸ்மேட்டர்) என்ற போராட்டத்துக்கு புதிய தூண்டுகோலாக அமைந்து விட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான், மின்னபொலிஸ் நகரில் வெள்ளையின காவல்துறை அலுவரால் ஜார்ஜ் ஃப்ளாய்டு என்ற கருப்பின மனிதர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் இந்தப் போராட்டம் கடுமையாக நடைபெற்றது.

இதற்கு முந்தைய தேர்தல்கள் பலவற்றிலும் கூட, இனப் பிரச்சனைகளும் கருப்பின மக்கள் படுகொலைகளும் அரசியல் விவாதங்களிலும் தேர்தல் பிரசாரங்களிலும் ஒரு பகுதியாக இருந்துள்ளன. ஆனால் இந்த முறை, அமைப்பு ரீதியிலான இனவாதம் தொடர்பாக தேசிய அளவிலான விவாதம் நடைபெறுவதாக வில்சன் சென்டர் – மதச் சுதந்திர அமைப்பின் மூத்த ஆய்வாளர் ஃபரஹ்னாஸ் இஸ்பஹானி கூறுகிறார்.

வாஷிங்டன் நகரில் இருந்து விவாதத்தில் இஸ்பஹானி பங்கேற்றார். “பல காலத்துக்கு முன்பே இனவாதம் பற்றிப் பேசியிருக்கிறோம். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குதல், அடிமைத்தன எதிர்ப்பு அல்லது குடியுரிமைப் போராட்டம் அல்லது மார்ட்டின் லூதர் கிங் என பல தளங்களில் இதுபற்றிப் பேசியிருக்கிறோம். அமெரிக்காவில் இனவாதம் பற்றி இதற்கு முன்பு ஒருபோதும் பேசப்பட்டதில்லை என்பதல்ல விஷயம்.

இந்த அளவுக்குக் கடுமையாக இதற்கு முன்பு பேசப்பட்டதில்லை என்பதுதான் விஷயம். மேலும் இதற்கு முன்பு இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதில்லை. அமெரிக்காவின் வரலாறு, புவியியலில் ஓர் அங்கமாக, முதன்முறையாக அமைப்பு ரீதியிலான இனவாதம் புகுத்தப்பட்டுள்ளது. இது யாருடைய அமெரிக்கா, யாருடைய அமெரிக்காவாக இருந்து வந்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதான் அந்த வேறுபாடு என்று நான் கருதுகிறேன்” என்றார் இஸ்பஹானி.

“அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சி ஒன்று (ஜனநாயகக் கட்சி), முதன்முறையாக இப்போதுதான் அமைப்பு ரீதியிலான இனவாதம் பற்றிப் பேசியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசியல் வட்டாரங்களில், ஒன்று இதனை மறுக்க வேண்டும் இல்லையேல் ஒப்புக்கொள்ள வேண்டும். அரசியல் வட்டாரங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மற்றும் அமெரிக்கப் பொதுமக்கள் என அமெரிக்கா முழுவதிலும் இந்தப் பேச்சு பரவியுள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து ஒரு கருத்துக்கு வந்தாக வேண்டும், இந்தத் தரப்பையோ அல்லது அந்தத் தரப்பையோ அவர்கள் சார்ந்தாக வேண்டும், எவ்வாறேனும் இதனை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்” என்று இஸ்பஹானி மேலும் கூறினார்.

இருப்பினும், குடியரசுக் கட்சியினர் தங்களது பிரசாரங்களின்போது ஜனநாயகக் கட்சியினரை தீவிர இடதுசாரிகள், கலகக்காரர்கள், கருப்பினப் போராட்டக்காரர்கள் மற்றும் வன்முறை வெறியாட்டக் கூட்டத்தினர் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆகையால், இந்தத் தீமைகளை அகற்றத் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோருகின்றனர்.

ஆக, இந்தக் கலந்துரையாடலின்போது, அமைப்பு ரீதியிலான இனவாதம் தொடர்பான தேசிய விவாதம் அமெரிக்கர்களை மேலும் பிளவுபடச் செய்யுமா? என ஸ்மிதா சர்மா கேள்வி எழுப்பியுள்ளார். இது, பழமைவாத வெள்ளையின அமெரிக்கர்களை ஒன்றுதிரட்டுமா? இனப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில், டிரம்ப்-பென்ஸ் குழுவை ஒப்பிடுகையில், ஏதேனும் ஆக்கப்பூர்வமான மாற்றுக் கருத்துகளை பிடென்-ஹாரிஸ் குழு முன்வைக்குமா?

“இந்த வாரம் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், நாம் பார்த்தது பிளவுவாதம் தான். ஒருபுறம் இதனைக் கண்டு அச்சப்படுவோரும் மறுபுறம் இதனை ஆதரித்துப் பிரதிபலிப்போரும் உள்ளனர். அமெரிக்கா மாற்றம் கண்டு வருகிறது. தற்போது மிகுந்த கலப்பின மக்கள் கொண்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்து வருகிறது. இது நிகழ்வதை நாம் தடுக்கப் போவதில்லை. ஆகையால் இதற்கு எதிரானவற்றைப் பின்னுக்குத் தள்ளுவதில் நாம் பங்கெடுக்கப் போகிறோம்.

‘புறநகர்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள், ஏனெனில் அவர்களது சுற்றுப்புறத்தை பிரச்சனைக்குரியவர்கள் அண்ட விடாத வகையில் நான் பாதுகாப்பு அளிப்பேன்’ என்று அதிபர் சுட்டுரைகளை (ட்வீட்டுகளை) வெளியிட்டிருப்பது 1950-களில் நிகழ்வதைப்போல் இருக்கிறது. ஆகையால் வெறும் கொள்கை என்ற அளவில் மட்டுமல்லாமல், இந்தத் தருணத்தில் நாம் எந்தப் பக்கம் சார்ந்து இருக்கிறோம் என்பதுதான் முக்கியமான விஷயம் ஆகும்” என்கிறார் டாக்டர் ப்ளாஸக்.

இன ரீதியிலான அநீதிப் பிரச்சனைகளில் மூத்த மற்றும் இளம் தலைமுறை அமெரிக்கர்கள் வேறுபடுகிறார்களா என்ற கேள்விக்கு டாக்டர் ப்ளாஸக் அளித்த பதில்: “உண்மையில், ஒரு தலைமுறை இடைவெளியை நாம் பார்க்கிறோம். 2050-ஆம் ஆண்டில் அமெரிக்க மக்கள்தொகையில் வெள்ளையின மக்களின் எண்ணிக்கை, வெள்ளையர் அற்ற மக்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைப்பு கணித்துள்ளது. ஆக பெரும்பான்மையினரைச் சிறுபான்மையினராகக் கொண்ட நாடாக அமெரிக்கா மாறிவிடும். இதுதான் இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பரபரப்பூட்டும் விஷயம் ஆகும்.

இதுவேதான், 1776-இல் இங்கே தங்களால் உருவாக்கப்பட்ட தங்களது நாட்டை, வேறு சிலர் தங்களிடமிருந்து எவ்விதமோ பறித்துவிடக் கூடும் என்ற அச்சத்தை வெள்ளையினத்தைச் சேர்ந்த சில மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால், குடியேற்றங்களுக்குத் தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தங்களது தற்காப்புக்கான தடுப்புச் சுவரை ஏற்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். அல்லது எந்த வகையிலாவது காலத்தைப் பின்னோக்கி திரும்பச் செய்து, மாற்றுப் பாலினத்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்த குடியேற்றவாசிகள் அல்லது முஸ்லிம்கள் அல்லது வேறு எந்த இனத்தவரோ, வெள்ளையினத்தவர்களின் பெரும்பான்மைக்குச் சவால் விட இயலாத சுத்தமான வெள்ளை ஆணாதிக்க நாடு என்ற பண்டைய நிலைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.”

“நான் அமெரிக்காவுக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்தேன். அப்போது 18 வயதில் நான் கண்ட அமெரிக்கா முற்றிலும் வேறு விதமாக இருந்தது. புலம்பெயர்ந்து வருவோர்களை மிகவும் வரவேற்றது. ஆனால், எங்களில் பெரும்பாலானோர் அப்போது மேற்படிப்புக்காக வந்தோம் அல்லது நன்கு படித்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். ஆனால், புலம்பெயர்ந்து வருவோரின் தன்மை மாறியதைத் தொடர்ந்து, அதற்கேற்ப கிடைக்கின்ற உபசரிப்பின் தன்மையும் மாறி விட்டது. ஆனால் நீங்கள் காணும் தலைமுறை மாற்றம் அப்பட்டமானது.

மூத்த தலைமுறை மக்களால், தங்களது வாழ்க்கை முறை, தங்களது கடவுள், தங்களது தேவலாயங்கள், தங்களது நிலம், ஆயுதம் வைத்திருப்பதற்கான தங்களது உரிமை ஆகியவற்றை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் காரணமாக, மாறிவரும் சூழ்நிலையோடு ஒத்துப்போக முடியவில்லை. ஆகையால், ஏராளமானோர் டொனால்டு டிரம்புக்கு வாக்களித்தனர். எனவே, இவையெல்லாம் நேர்மறையான வாக்குகளாக இருப்பதற்கு அவசியமில்லை” என்று பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்து வந்த ஃபரஹ்னாஸ் இஸ்பஹானி தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.