பஞ்சாப் மாநில இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. இது குறித்து, முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் கூறுகையில், “மாநில இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அடுத்த இரு ஆண்டுகளில், காவல் துறை, சுகாதாரம் என பல்வேறு துறைகளில் ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்த வேலை வாய்ப்புகள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் தகுதி அடிப்படையில் கொடுக்கப்படும். நுகர்வோர் மின் கட்டணத்தில், நிவாரணம் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மின்சாரக் கட்டணத்தை மறுஆய்வு செய்ய பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் மின் கட்டுப்பாட்டாளர், புதிய மின் கட்டணத்தின் இறுதி விவரங்களை வழங்க முடியும். பொதுமக்களின் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு ஐந்தாயிரம் சிற்றுந்து (மினி பேருந்து) வாகனத்துக்கு பயண அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கிராமப் புறங்களில் 750 விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லும் நிர்பயா குற்றவாளிகள்!