புதுச்சேரி மாநில காமராஜர் நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது, இதற்கான பணிகளில் சுற்றுலாத் துறை இயக்குநரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான முகமது மன்சூர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதற்காக உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது. வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் 30ஆம் தேதி என்றும் தேர்தல் துறை அறிவித்துள்ளது.
வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவர்கள் அக்டோபர் 3 ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அன்றைய தினம் மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தேர்தல் துறை சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கடந்த மூன்று நாட்களாக எந்த ஒரு அரசியல் கட்சிகளோ , சுயேட்சைகள் சார்பாகவோ யாரும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு இதுவரை வேட்புமனுத் தாக்கல் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது