புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் மூன்று எம்எல்ஏக்கள் நியமனம் இலவச அரிசிக்கு பணம், மாநில தேர்தல் ஆணையர் நியமனம் உள்ளிட்ட அனைத்திலும் அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது.
இதற்கு முதலமைச்சர் நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பட்ஜெட்டில் அரிசிக்காக ரூ. 166 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் ரூ. 96 கோடிதான் செலவு செய்துள்ளனர். மீதமுள்ள ரூபாய் 70 கோடி எங்கே போனது. அந்தப் பணத்தை மக்கள் வங்கி கணக்கில் போடவேண்டும்" என்றார்.
மேலும், புதுச்சேரியில் அரிசிக்கான பணம் வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: அரசுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 1 வாரம் கெடு!