புதுச்சேரி கோவிந்த சாலை பகுதி அந்தோணியார் கோயில் வீதியை சேர்ந்தவர் மணி என்கிற மணிகண்டன்.
புதுச்சேரி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவரான இவர் அக்டோபர் 4 ஆம் தேதி அன்று இரவு நெல்லித்தோப்பு மார்க்கெட் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து உருளையன்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறையினர் தரப்பில் இந்த கொலை குறித்து கூறுகையில், இறந்த மணிகண்டன் அவரது மைத்துனரான ராஜசேகர் என்பவருடன் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் யார் என்பதில் மோதல் இருந்து வந்துள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்
தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகர் அவனது கூட்டாளியான சுனில், ஜான்சன், சந்தோஷ், மாறன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய நான்கு கத்திகள், மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரையும் கரோனா பரிசோதனைக்கு பின் மத்திய சிறையில் அடைத்தனர்.
விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை: 5 பேர் கைது - புதுச்சேரி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை
புதுச்சேரி: விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் கொலை வழக்கில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.