கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுவதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்புடன் செயல்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் உழவர் சந்தைகள், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் போன்றவை இயங்க அனுமதிக்கப்பட்டன. புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'புதுச்சேரி மக்கள் ஊடரங்கு உத்தரவை கடைபிடிக்க தவறிவிட்டனர்' என முதலமைச்சர் நாராயணசாமி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருளான காய்கறி விற்பனை செய்யப்படும் பழைய பேருந்து நிலையத்தை திடீரென இன்று நேரில் பார்வையிட்டார். சமூக இடைவெளியுடன் காய்கறிகளை மக்கள் வாங்குகின்றனரா? வியாபாரிகள் விலையை அதிகப்படுத்தியுள்ளனரா? என்பன குறித்து ஆய்வு செய்தார். வியாபாரிகளில் முகக்கவசம் அணியாதவர்களைக் கண்டித்து, முகக்கவசம் அணிய அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் முக்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தலின்போது வேண்டிய சமச்சீர் உணவு!