இது பற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியதாவது, புதுச்சேரியில் 6 பேரும், காரைக்காலில் ஒருவரும் தற்போது கரோனா சிகிச்சை நடைபெறுகிறது. தற்போது டெல்லியிலிருந்து 11 பேரும், ஐதராபாத்தில் இருந்து 7 பேரும், அபுதாபியில் இருந்து 4 பேரும் புதுச்சேரி வந்துள்ளனர். அவர்கள் தற்போது புதுச்சேரி கோரிமேடு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்
முக்கியமாக, புதுச்சேரி மாநிலத்தில் கைத் தொடாத விளையாட்டு போட்டிகளை மட்டும் நடத்த அனுமதிக்கலாம் என முடிவு செய்துள்ளோம். அதில் குறிப்பாக உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், கபடி போன்றவைக்கு கண்டிப்பாக தற்போதைக்கு அனுமதியில்லை எனவும், மற்ற விளையாட்டிற்கு பயிற்சி கொடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் அவசரமாக மாநில சுகாதாரத்துறைக்கு கரோனா நிதியாக ருபாய் 100 கோடி நிதி தேவை உள்ளது. மேலும் வரும் நிதியாண்டில் மாநில சுகாதாரத்துறைக்கு ரூபாய் 1030 கோடி நிதி தேவை இருகின்றது. குறிப்பாக மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தேவையும் எதிர்காலத்தில் உள்ளது என்றார்.
இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் - ஜாமியா மாணவர்கள் கைது குறித்து சிதம்பரம்