ETV Bharat / bharat

புதுச்சேரிக்குள் அத்துமீறி நுழைந்த நான்கு பேர் கைது

புதுச்சேரி: தமிழ்நாடு - புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதிக்குள் தடையை மீறி நுழைந்து, காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரிக்குள் நுழைந்த 4பேர் கைது!
புதுச்சேரிக்குள் நுழைந்த 4பேர் கைது!
author img

By

Published : Jun 18, 2020, 12:50 PM IST

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பகுதிகளைச் சேர்ந்தவர்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதையொட்டி மாநில எல்லைகளைக் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் மூடியுள்ளனர். இதனால் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு எவரும் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், தற்போது வானூர் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் புதுவை கோரிமேடு எல்லையில் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்களை மறித்து தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்று வாகன ஓட்டிகளிடம் கூறியுள்ளனர்.

புதுச்சேரிக்குள் நுழைந்த நான்கு பேர் கைது

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோட்டகுப்பம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் கோபமடைந்துள்ளார். மேலும், இதைக் கேட்பதற்கு நீங்கள் யார் எனவும் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க...21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனி உடல் நல்லடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.