ETV Bharat / bharat

வெங்காயம் விற்க கிரண் பேடி தடுக்கிறார் - அமைச்சர் குற்றச்சாட்டு

author img

By

Published : Oct 22, 2020, 12:18 PM IST

புதுச்சேரி: குறைந்த விலையில் வெங்காயத்தை விற்க கிரண் பேடி தடுக்கிறார் என அமைச்சர் கந்தசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறைந்த விலையில் வெங்காயம் விற்க கிரண் பேடி தடுக்கிறார்! - புதுச்சேரி அமைச்சர்

புதுச்சேரியில் வெங்காயம் பதுக்கி வைக்கப்படுவதாகவும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமிக்கு புகார் வந்தது. இதனையடுத்து இன்று பெரிய மார்க்கெட்டில் அமைச்சர் கந்தசாமி அத்துறை அலுவலர்களுடன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது கடைகளின் கிடங்குகளிலும் ஆய்வு செய்த அமைச்சர் வெங்காயத்தை பதுக்குதல், கூடுதல் விலைக்கு விற்றல் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என வியாபாரிகளை எச்சரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கந்தசாமி,” தமிழ்நாட்டைப் போல மலிவு விலையில் வெங்காயத்தை மக்களுக்கு வழங்க முடியாமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருக்கிறார். ரேஷன் மூலம் அரிசி வழங்க தடை செய்யும் கிரண்பேடி பல கோப்புகளை முடக்கியுள்ளார்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.