புதுச்சேரி கடற்கரை சாலையில் 10ஆவது முறையாக பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை புதுச்சேரி சுற்றுலாத் துறையும் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார்ஸ் கிளப்பும் இணைந்து 2010 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகின்றனர்.
இதில், சென்னையிலிருந்து 60 பாரம்பரிய கார்களும், பொள்ளாச்சியிலிருந்து 4 கார்களும், புதுச்சேரியிலிருந்து 10 பாரம்பரிய கார்களும் இடம்பெற்றன.
மக்களைப் பெரிதும் கவர்ந்த 1927ஆம் ஆண்டு ஆஸ்டின், 1935 ஆம் ஆண்டின் மோரிஸ், 1946 ஆம் ஆண்டின் சிட்ரன் உள்ளிட்ட சிங்கர், பேர்ட் முஸ்டாங், மோரிஸ் மைனர், ஜாகுவார் நிறுவனங்களின் பல கார்களும் இடம்பெற்றன.
மேலும், விடுமுறை நாள்கள் என்பதால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஏராளமானோர் பார்வையிட்டு பாரம்பரிய கார்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: பெண்ணிடம் திருமண ஆசைக் காட்டி ரூ.27 லட்சம் அபேஸ் செய்தவர் கைது!