ETV Bharat / bharat

இனி இது மாதிரி நடக்காது - புதுவை சுகாதாரத் துறை

author img

By

Published : Jun 7, 2020, 4:55 AM IST

புதுச்சேரி: கரோனா தொற்றுக்கு இறப்பவர்களை சுகாதாரத் துறை ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் அடக்கம் செய்வார்கள் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார்
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரியில் உள்ள தனது மனைவியை காண மாமியார் வீட்டுக்கு நேற்று முன்தினம் (ஜூன் 4) சென்றுள்ளார்.
அங்கு சென்றவர் சற்று நேரத்தில் திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினர். இதையடுத்து அவரின் உடலை உடற்கூறாய்வுக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதற்கு முன்பாக அவருக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்தனர். அதில் கரோனா தொற்று உறுதியானது.
இதனையடுத்து நகராட்சி சார்பில் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுகாதாரத்துறை முன்னிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்றால் உயிரிழந்த நபரை அலட்சியமாகக் குழியில் வீசுவதாகக் கூறி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலானது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார், "உலக சுகாதாரத்துறை அமைப்பின் வழிகாட்டுதலின்படி உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது 12 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் அருகே உயிரிழந்தவரின் உடலைக் கொண்டு சென்றபோது ஊழியர்களில் ஒருவருடைய கை நழுவியதால் அவருடைய உடல் உருண்டு பள்ளத்தில் விழுந்துள்ளது.
குறிப்பாக, புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வது இதுவே முதன்முறை என்பதால், ஊழியர்கள் அச்சம் கொண்ட காரணத்தினால் இது நடைபெற்றிருக்கலாம்.
மேற்கொண்டு இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.