மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ, திமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து இன்று (டிச. 08) காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் புதுச்சேரியில் தொடங்கியது.
இந்நிலையில் புதுச்சேரி பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகள், அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி போராட்டம் நடைபெறும் பகுதியில் பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஜனநாயக விதிமுறையை மீறி, மோடி அரசு நிறைவேற்றிய இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்தச் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்படும்” என்றார்.
இதையும் படிங்க...புயல் பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை!