புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம் பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலத்தை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் சூறையாடினர். இந்நிலையில் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து, அரசு தலைமை பொது மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவர்கள் 2 மணி நேரம் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை முன்பு 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.