மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 26-ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதனையடுத்து வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதன் பின்னர் புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை உதவி தேர்தல் அதிகாரி சக்திவேல் வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்திக்கையில், 'புதுவை மக்களை தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 37 வேட்புமனுக்களில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டது. வேட்புமனுக்களை யாரும் திரும்பபெறவில்லை. 18 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், மக்கள் வாக்களிக்க இரண்டு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். நோட்டாவுக்கு கடைசியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
மேலும், 'புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 10 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இரண்டு மனுக்கள் திரும்பபெறப்பட்டதையடுத்து, 8 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக' தெரிவித்தார்.
இதனையடுத்து, 'புதுச்சேரி தேர்தல் துறைக்கு உட்பட்ட பகுதியான மாகி காவல் நிலையத்தில் தேர்தல் தொடர்பாக ஒரு வழக்கும், கலால் துறை சார்பாக 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரிஉதவி தேர்தல் அதிகாரி சக்திவேல்' தெரிவித்தார்.