ETV Bharat / bharat

'இனி ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு' - நாராயணசாமி உத்தரவு! - mid meal for iti students

புதுச்சேரி: ஐடிஐ தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் நாராயணசாமி
author img

By

Published : Jul 18, 2019, 5:52 PM IST

புதுச்சேரியில் ஒவ்வொரு தொகுதியாக மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்கும் 'மக்கள் குறள்' என்ற குறைதீர்ப்பு முகாம் இன்று தொடங்கபட்டது. முதல் நாளான இன்று நெட்டப்பாக்கம் தொகுதியில் குறைதீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. அதில் முதலமைச்சர் நாராயணசாமி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி ஆகியோர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர்.

முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 23 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா பெயர், குடும்ப உணவு பங்கீட்டு அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன் வைத்தனர். மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போல் ஐடிஐ தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்ற முதலமைச்சர் நாராயணசாமி, மேடையிலேயே 2500 ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு அளிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஐடிஐ தொழில்நுட்ப மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் - முதல்வர் நாராயணசாமி உத்தரவு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "மக்கள் அளித்த மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்ததாக காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்" என்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமை செயலர், அரசு செயலர்கள், துறை இயக்குநர்களுடன் பொது மக்களும் பங்கேற்றனர்.

Intro:அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போல் ITI தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் வழங்க மக்கள் குறை தீர்வு முகாமில் அளித்த மனுவிற்கு மேடையிலேயே 2500 பேருக்கு மதிய உணவு அளிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்Body:புதுச்சேரி ...

அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போல் ITI தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் வழங்க மக்கள் குறை தீர்வு முகாமில் அளித்த மனுவிற்கு மேடையிலேயே 2500 பேருக்கு மதிய உணவு அளிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்..

புதுச்சேரியில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயலர், அரசு செயலர்கள், துறை இயக்குநர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒவ்வொரு தொகுதியாக மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்கும் "மக்கள் குறள்" என்ற குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் தொடங்கபட்டுள்ளது. நெட்டப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயவேணி கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றனர்.
பல்வேறு துறைகளின் சார்பில் 23 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா பெயர் மாற்றம், குடும்ப உணவு பங்கீட்டு அட்டை வழங்குதல், முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வைத்தனர்.

முகாமில் முதல்வரிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போல் ITI தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.மனுவை பெற்ற முதல்வர் நாராயணசாமி, மேடையிலேயே 2500

ITI மாணவர்களுக்கும் மதிய உணவு அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த முதல்வர் நாராயணசாமி

பொது மக்கள் அளித்த மனுக்கள் மீது அதிகாரிகள் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பார்கள்.இது பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

அடுத்ததாக காரைக்கால்,மாகி,ஏனாம் மற்றும் கிராமப்புற தொகுதிகளில் மக்கள் குறை தீர்வு முகாம் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்Conclusion:அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போல் ITI தொழில்நுட்ப பள்ளி மாணவர்களுக்கும் வழங்க மக்கள் குறை தீர்வு முகாமில் அளித்த மனுவிற்கு மேடையிலேயே 2500 பேருக்கு மதிய உணவு அளிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.