புதுச்சேரி அரசு, மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்கிறது. இதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வழிவகுத்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் நடைபெறும் மண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி 2019-ஐ கல்வித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். மேலும் மாணவர்களிடம் அவர் ஒரு படைப்பு குறித்து விளக்கங்கள் கேட்டும் ஊக்குவித்தார்.
இந்த அறிவியல் கண்காட்சியில் நிலையான வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பம் என்ற முதன்மை தலைப்பில் அரங்கில் 340 அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதுகாத்தல், மழைநீர் சேகரித்தல், மண்வளம் பாதுகாத்தல் உள்ளிட்ட படைப்புகளும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க... மண்ணை உண்டு வாழும் அதிசயப் பாட்டி!