புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் புதுச்சேரி அரசின் 2020ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமசிவாயம் ஆகியோர் வெளியிட தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் பெற்றுக்கொண்டார். இதில் 18,19ஆம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் வகையில் புதுச்சேரியின் பாரம்பரிய கட்டடங்களும் இடம்பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "பாரம்பரியத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இந்தாண்டின் நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. இளைஞர்கள் நமது பாரம்பரிய கட்டடங்கள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு காமராஜ் சாலை பழுதடைந்திருந்ததாகக் கூறி எதிர்க்கட்சிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போராட்டம் நடத்தினர். டிசம்பர் 15 வரை மழைக்காலம். மழைக்காலம் முடிந்த பிறகுதான் கோப்புகளை தயார் செய்து சாலையை செப்பனிடமுடியும். அதற்கான பணகிள் தற்போது நடைபெற்றவருகிரது. அதற்குள் எவ்வித கோரிக்கையும் முன்வைக்காமல் போராட்டம் நடத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘மாணவர்களை இழிவுபடுத்திய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்’ - இந்திய மாணவர் சங்கம்!