ETV Bharat / bharat

நாராயணசாமி வெளியே, நமச்சிவாயம் உள்ளே? - புதுவையில் தொடங்கிய புதுக்கணக்கு - நாராயண சாமி வெளியே, நமச்சிவாயம் உள்ளே? புதுவையில் தொடங்கிய புதுகணக்கு

புதுச்சேரி முதலமைச்சர் பதவியிலிருந்து நாராயணசாமி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நமச்சிவாயம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Puducherry CM Narayanasamy Replaced by namasivayam  Puducherry, Narayana swamy, Namasivayam  Pudhucherry Congresss  புதுச்சேரியில் அரசியல் மாற்றம்  நமச்சிவாயம், நாராயண சாமி கருத்து வேறுபாடு  நாராயண சாமி வெளியே, நமச்சிவாயம் உள்ளே? புதுவையில் தொடங்கிய புதுகணக்கு  புதுச்சேரியில் ஆட்சி மாற்றம்
Puducherry CM Narayanasamy Replaced by namasivayam
author img

By

Published : Mar 6, 2020, 12:20 PM IST

Updated : Mar 6, 2020, 12:27 PM IST

தமிழ்நாட்டின் அருகில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அடுத்தாண்டு (2021) சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பதவியிலிருந்து நாராயணசாமி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாகக் கட்சியின் மூத்தத் தலைவர் நமச்சிவாயம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக இருந்த ஆ. நமச்சிவாயம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதில், காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக நமச்சிவாயத்தை டெல்லிக்கு நேரில் அழைத்த அகில இந்திய காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் ஏ.வி. சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஒரு கோஷ்டியும், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் இயங்கிவருகின்றன.

2016ஆம் ஆண்டு முதலமைச்சராக நமச்சிவாயம்தான் பதவியேற்பார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கிடையில் யாரும் எதிர்பாராத வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்.

இது நமச்சிவாயத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவருக்கு, நாராயணசாமிக்கு அடுத்த இடம் வழங்கப்பட்டது. பொதுப்பணித் துறை, கட்சிப் பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் நாராயணசாமி முதலமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நமச்சிவாயம் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

யூகத்தின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் இந்தச் செய்தி அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடக்குமா? - அஞ்சும் தெலுங்கு தேசம்

Last Updated : Mar 6, 2020, 12:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.