நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், முகக்கவசங்கள் அணியவும் மக்களை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.
![மருத்துவர் முகமது ஹக்கீம், புதுச்சேரி முதலமைச்சர், அலுவலர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-05-mask-cm-give-7205842_03062020155351_0306f_1591179831_363.jpg)
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் முகமது ஹக்கீம் என்பவர், கேட்கும் திறனற்றவர்களுக்கும், வாய் பேச முடியாதவர்களுக்கும் பிரத்யேக முகக்கவசங்களை வடிவமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, தான் தயாரித்த முகக்கவசங்களை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியைச் சந்தித்து இன்று வழங்கினார்.
![மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக முகக்கவசங்களை அணிவித்த முதலமைச்சர் நாராயணசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-05-mask-cm-give-7205842_03062020155351_0306f_1591179831_923.jpg)
சுமார் 500 முகக்கவசங்களை அவர் வழங்கியதையடுத்து, நாராயணசாமி அவற்றைப் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வின்போது அம்மாநில சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி, சமூகநலத் துறை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் நான்காவது நாளாக ஆயிரத்தை தொட்ட கரோனா