ETV Bharat / bharat

புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்களுக்குத் தடை!

author img

By

Published : Mar 22, 2020, 1:25 PM IST

Updated : Mar 22, 2020, 3:42 PM IST

puducherry-cm
puducherry-cm

13:24 March 22

புதுச்சேரி: வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை புதுச்சேரிக்குள் நுழையத் தடை விதிக்கப்படுள்ளது.

Puducherry cm announcement
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ட்விட்டர்

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நேற்று காலை 245 ஆக இருந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் தற்போது 370ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இன்று ஒரு நாள் முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 

இந்நிலையில், புதுச்சேரியில் நாளை (23-03-2020) முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு உட்பட அண்டை மாநில வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அண்டை மாநில அரசு வாகங்களுக்கும் பொருந்தும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார். இத்தகவலை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தனது ட்விட்டர் பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: மார்ச் 31 வரை ரயில்கள் ரத்து!

Last Updated : Mar 22, 2020, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.