ETV Bharat / bharat

’குருமா நோய் வருதுன்னு சொன்னாங்க, அதான் வேப்பிலையை வைச்சிக்கிட்டு வேலைசெய்றேன்!' - pondycherry kuruma virus

புதுச்சேரி: கரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் தலையில் வேப்பிலையை வைத்துகொண்டு பணிபுரிந்துவருகிறார்.

puducherry
puducherry
author img

By

Published : Apr 18, 2020, 10:42 AM IST

Updated : Apr 18, 2020, 10:58 AM IST

புதுச்சேரியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவர், கரோனா வைரஸ் தொற்றிலிலிந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைத்து அவரது தலையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு, தூய்மைப் பணியில் ஈடுபட்டுவருகிறார்.

அவரிடம், ஏன் தலையில் வேப்பிலையை வைத்துக்கொண்டு வேலை பார்க்குறீங்க எனக் கேட்டதற்கு, “இப்போ எல்லாம் நாடுவிட்டு நாடு, நகரம் விட்டு நகரம் ஊருக்கு எவ்வளவோ தீங்கு வருகிறது. புதுச்சேரியில் நாங்க உழைக்கிறோம், போறோம்... வர்றோம்... எங்களுக்கு லீவும் கிடையாது, எதுவும் கிடையாது.

தூய்மைப் பணியாளர் பேசிய காணொலி

இதுபோல, இந்தக் குருமா வருதுன்னு சொன்னாங்க, எங்க ஊர் பசங்க யாரும் எங்களை வேலைக்கு அனுப்பல, நீ போனா திரும்ப வர மாட்டேன்னு சொன்னாங்க. ஏதோ கடவுள் நம்பிக்கையிலே, என் சேஃப்டிக்காக வேப்பிலையை நான் தலையில் வைச்சிக்கிட்டு வேலைக்கு வரேன்” என கரோனா வைரசின் பெயர்கூட தெரியாமல் வெள்ளந்தியாக அவர் பேசிய காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:இத பாத்தா கரோனாவே மிரண்டுரும்; அலறவிடும் கோவையன்ஸின் அசாதாரண கண்டுபிடிப்பு!

Last Updated : Apr 18, 2020, 10:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.