இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், “மாநிலத்தில் புதுச்சேரி ஆரஞ்சு மண்டலமாகவும், காரைக்கால், ஏனாம் பகுதிகள் பச்சை பகுதியாகவும் மாஹே ஆரஞ்சு பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மண்டலங்களுக்கு தகுந்தவாறு மத்திய அரசின் உத்தரவின்படி தொழில், கடைகள் என என்னென்னவற்றுக்கு அனுமதி என்பது நாளை கூடும் அமைச்சரவையில் முடிவு செய்யப்படும்” எனக் கூறினார்
மேலும், “புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ஏழு கோடி ரூபாய்க்கு மேல் வந்துள்ளது. இவை மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவுகின்றது. இருப்பினும் புதுச்சேரி அரசுக்கு நிதியுதவி தேவைப்படுகிறது. அதனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு நிதி உதவி வழங்க வேண்டும். புதுச்சேரியில் வருகின்ற திங்கட்கிழமை முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை மருத்துவர்கள், காவல் துறை, பொதுப்பணி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...'பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் நடவடிக்கை'