ETV Bharat / bharat

'தமிழ் மொழியை நீக்கி விட்டு ஆங்கிலம் சேர்ப்பு'- புதுச்சேரி மக்கள் எதிர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதுச்சேரியின் வரலாற்றை அறிய வைக்கப்படும் கல்வெட்டுகள் எழுத்துப்பிழைகளுடனும், வழிகாட்டி பலகைகளில் தமிழ் மொழியை நீக்கி விட்டு ஆங்கில மொழியில் மட்டும் வைக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

ஆங்கில பலகைகள்
author img

By

Published : Jul 8, 2019, 11:53 PM IST

புதுச்சேரி நகரை அழகுபடுத்தவும், புதுச்சேரி வரலாற்றை தெரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஒவ்வொரு தெருக்களிலும் அதன் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் கூறும் கல்வெட்டுகள் பதித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் இப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி வரலாற்றில் கல்வெட்டுகளில் தமிழில் ஏராளமான எழுத்து பிழைகள் உள்ளன.

ஆவணக்காப்பகம் உள்ள 'மாஹே லபோர்தெனே' வீதியையும் அதில் உள்ள குறிப்புகளையும் தவறாக குறிப்பிட்டுள்ளனர். இந்த வீதீயின் பெயரை 'மாஹி தே லபூர்தோனே' வீதி என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர். சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் பிழைகள் இருப்பதை தமிழ் அறிஞர்கள் சுட்டிக் காட்டியதை அடுத்து கல்வெட்டுகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

ஆங்கில பலகைகள்

ஏற்கனவே தமிழ் மொழி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டிருந்ததை எடுத்து விட்டு, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் புதுச்சேரி தெருக்களின் பெயர்கள் மற்றும் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகள் ஆகியவற்றில் ஆங்கிலத்தில் வைத்துள்ளனர். இது பொதுமக்களிடமும் தமிழர்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கி உள்ள நிலையில் நகர்ப்பகுதிகளில் வரலாற்றை அறிய வைக்கப்படும் கல்வெட்டுகள் எழுத்துப்பிழைகளுடன் மற்றும் வழிகாட்டி பலகைகள் தமிழ் மொழி நீங்களாக ஆங்கில மொழியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது இது பொதுமக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது

Body:புதுச்சேரி நகரை அழகுபடுத்தவும் புதுச்சேரி வரலாற்றை தெரிந்து கொள்ளவும் கூடிய வகையில் ஒவ்வொரு தெருக்களிலும் அதன் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் கூறும் கல்வெட்டுகள் பதித்து வருகின்றனர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் இப் பணிகள் நடைபெற்று வருகின்றன புதுச்சேரி வரலாற்றில் கல்வெட்டுகளில் தமிழில் ஏராளமான எழுத்து பிழைகள்உடனும் கல்வெட்டுகள் அமைந்துள்ளன குறிப்பாக கடற்கரை சாலையில் உள்ள கல்வெட்டுகளில் பப்பா (பிரெஞ்சு மொழியில் அப்பா) குபேர் பாப்பா குபேர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்

ஆவண காப்பகத்துக்கு ஒட்டி உள்ள கல்வெட்டில் தெருவில் பெயரையே தவறாக குறிப்பிட்டுள்ளனர் ஆவணக்காப்பகம் உள்ள மாஹே லபோர்தெனே வீதியையும் அதில் உள்ள குறிப்புகளும் புதிதாக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தவறாக உள்ளது இவ் வீதியை மாஹி தே லபூர்தோனே வீதி என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர்

சில இடங்களில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் பிழைகள் இருப்பதை தமிழ் அறிஞர்கள் சுட்டிக் காட்டியதை அடுத்து கல்வெட்டுகளே அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன

மேலும் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் புதுச்சேரி ஆங்கில எழுத்துக்கள் தெருக்களின் பெயர்கள் அங்கங்கே புதிதாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன ஏற்கனவே தமிழ் மொழி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டிருந்தது அதனை அகற்றி விட்டு தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டுள்ள புதுச்சேரியில் தெருக்களின் பெயர்கள் ஆங்கில மொழிகளில் மட்டுமே வைக்கப்பட்டு வருகின்றன இது பொதுமக்களிடையே மற்றும் தமிழர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

Conclusion:புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கி உள்ள நிலையில் நகர்ப்பகுதிகளில் வரலாற்றை அறிய வைக்கப்படும் கல்வெட்டுகள் எழுத்துப்பிழைகளுடன் மற்றும் வழிகாட்டி பலகைகள் தமிழ் மொழி நீங்களாக ஆங்கில மொழியில் மட்டும் வைக்கப்பட்டு வருகிறது இது பொதுமக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.