புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2019-20ஆம் கல்வியாண்டில் 225 விழுக்காடு உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், புதுவை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடங்களை அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் பேரவையினர் போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் போராடிய மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் நேற்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
இதனிடையே இன்று, புதுச்சேரி பல்கலைகழக மாணவர் பேரவையின் கோரிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகம் உடனே நிறைவேற்ற வலியுறுத்தி புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சார்பில், கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழகக் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: கல்விக்கட்டண உயர்வு: போராடிய மாணவர்கள் வலுக்கட்டாயமாகக் கைது!