ஒதியம்பட்டு, கூடம்பாக்கம், வில்லியனூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கிளிகள் விற்பனை செய்யப்பட்டுவந்தன. இதனைக் கவனித்த அப்பகுதி பொதுமக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இது குறித்து உடனடியாக மாநில வனத் துறைக்குத் தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் புதுச்சேரி மாநில வனத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதனைக் கவனித்த வேட்டையாடிகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த கிளிகள், கொக்குகளை அப்படியே சாலையோரத்தில் விட்டுவிட்டு தப்பியோடினர்.
இதையடுத்து வனத் துறையினர் அங்கிருந்த 22 கொக்குகள், 10 கிளிகள் ஆகியவற்றை பறிமுதல்செய்து புதுச்சேரி வனத் துறை வளாகத்திற்கு கொண்டுசென்றனர்.
இதையும் படிங்க: 'அய்யோ... அங்கிட்டுப் போகாதீங்கப்பா' - பவானிசாகர் அணையை பதறவிட்ட மலைப்பாம்பு