புதுச்சேரியில் அண்மைக்காலமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கரோனா பிரிவை, முதலமைச்சர் நாராயணசாமியும், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவும் இன்று ஆய்வுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இருவரும் கோவிட் பிரிவில் பணியாற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்களுடன் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும், புதுவை மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் அளிக்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.
இதையும் படிங்க: சாலையோரம் இறந்துகிடந்த முதியவர்: கரோனா பீதியில் மக்கள்!