ETV Bharat / bharat

புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறப்பு! - மதுக்கடை

புதுச்சேரி: மதுக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகள், தொழிற்சாலைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

cm
cm
author img

By

Published : May 18, 2020, 5:20 PM IST

புதுச்சேரி அரசின் அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் அஸ்வின்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி காட்சிப்பதிவு வாயிலாகத் தெரிவித்தார். அதில், “புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கும், அங்கிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும். வழியில் எங்கேயும் நிறுத்தாமல் நேரடியாக பேருந்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தகுந்த இடைவெளியுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படுகிறது.

ஊரடங்கு மே 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம். நாளை முதல் அனைத்துக் கடைகளும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம்.

புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறப்பு!

மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை, வருவாய்துறை, கலால்துறை ஆகியோர் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளுக்கு கோவிட் வரி போடுவது குறித்து அமைச்சரவையில் பேசி முடிவு எடுக்கப்படும்“ என்றார்.

இதையும் படிங்க: வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதிக்க முடியாது! - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.