ETV Bharat / bharat

மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி - பட்ஜெட்

புதுச்சேரி: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய மக்களுக்கு ஏதுமற்று, பணக்காரர்களுக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

narayanasamy
narayanasamy
author img

By

Published : Feb 1, 2020, 8:28 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, “ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில், விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் எதுவுமில்லை. விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் இல்லை. சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்வண்டிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் பற்றி அறிக்கையில் ஏதுமில்லை. இது முழுக்க முழுக்க ஏமாற்றம் அளிக்கக்கூடிய நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த பட்ஜெட் முதலாளிகளுக்கானதே தவிர, ஏழை எளிய மக்களுக்கானது அல்ல.

மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட்

லடாக், ஜம்மு காஷ்மீர் போன்ற ஒன்றியப் பிரதேசங்களுக்கு பல்லாயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், புதுச்சேரிக்கு ஒன்றும் ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரி ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது “ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள்

Intro:மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் இல்லை ஒட்டுமொத்தமாக பூசப்பட்ட பட்ஜெட் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர் சந்தித்த முதல்வர் நாராயணசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டம் எதுவுமில்லை விவசாயிகளுக்கு புதிய திட்டம் எதுவும் இல்லை சாதாரணமான மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது மேலும் உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டி அவர் ரயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது புதிய வேலைவாய்ப்புகள் அறிவிப்பார் என எதிர்பார்த்தோம் ஆனால் இல்லை ஏமாற்றம் தரக்கூடிய பட்ஜெட்டாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் ஒட்டுமொத்தமாக பூசப்பட்ட பட்ஜெட்டாக உள்ளது
இந்த பட்ஜெட் பணம் முதலாளிகளுக்கான பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் இல்லை என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய பட்ஜெட்டுக்கு குறிப்பு தனது கருத்தைக் தெரிவித்தார்

லடக் ஜம்மு காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு பல ஆயிரம் கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளது ஆனால் புதுச்சேரிக்கு ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லை புதுச்சேரி ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று முதல் நாராயணசாமி தெரிவித்தார்

Conclusion:மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் இல்லை ஒட்டுமொத்தமாக பூசப்பட்ட பட்ஜெட் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.