மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தேர்தலில் மக்கள் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு செய்வதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சூழ்நிலையில் இன்று புதுச்சேரி இதயா கல்லூரி மாணவிகள் மக்கள் நூறு விழுக்காடு வாக்கு அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணியாக நடைபயணத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணை தேர்தல் அலுவலர் தில்லைவேல் இந்த நடைபயண பரப்புரையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாணவியர் பதாகைகளை ஏந்தியபடி தேர்தல் விதிமுறைகளை விளக்கி நடைபயணத்தில் ஈடுபட்டனர்.