புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 23 ஆம் தேதி முதல் தொடங்கியது. நேற்று வரை நாம் தமிழர் கட்சி, சோஷியலிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மூன்று பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான இன்று காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனா (எ) புவனேஸ்வரன் மற்றும் மக்கள் முன்னேற்றக் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை சுற்றுலாத்துறை இயக்குநரும் தேர்தல் அலுவலருமான மன்சூரிடம் தாக்கல் செய்தனர்.
இதனால் காமராஜ் நகரில் போட்டியிட மனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சி புதுச்சேரி இடைத்தேர்தலில் போட்டி!