புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மற்றவர்கள் குணமாகி வீடு திரும்பிய நிலையில் தற்போது 27 பேர் நோய்த் தொற்றால் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கரோனா தொடர்பாக நிலைமை மோசமாவதை தடுக்கும் விதமாக புதுச்சேரி சட்டப்பேரவை கேபினட் அறையில் கரோனா தொடர்பான அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மேலும் இந்தக் கூட்டத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், தலைமை செயலர் அசுவின் குமார், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருன், சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார் பாண்டா, டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்சவா, சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார், கோவிட் 19 மண்டல அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி நகர், புறநகர் பகுதிகளிலும், மற்ற பிராந்தியங்களிலும், கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிவருவதால் புதுச்சேரி முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கலாமா, உள்ளூர் பேருந்துகள் தொடர்ந்து இயக்குவது சரிவருமா, போன்றவை குறித்து இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையும் படிங்க... நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் - நாராயணசாமி ஆவேசம்