ETV Bharat / bharat

இஸ்லாமிய வெறுப்பு வாதத்தைப் பரப்பும் போலி அறிவுஜீவிகள் - மத்திய அமைச்சர் சிறப்புப் பேட்டி

டெல்லி: இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நீண்ட காலம் நீடிப்பதற்கு டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்களின் அலட்சியமே காரணம் என்றும் நாட்டிலுள்ள சில போலி அறிவுஜீவிகள் இஸ்லாமிய வெறுப்பு வாதத்தை திட்டமிட்டு பரப்புவதாகவும் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

Mukhtar Abbas Naqvi
Mukhtar Abbas Naqvi
author img

By

Published : May 24, 2020, 11:06 AM IST

இந்தியாவில் கோவிட்-19 பரவல் குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஈடிவி பாரத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்தார். கோவிட்-19 பரவல் குறித்து முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், "டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் மட்டும் நாட்டில் கரோனாவை பரப்பவில்லை என்றால் நாம் இவ்வளவு காலம் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கத் தேவையில்லை.

அவர்களது குற்றவியல் அலட்சியத்தால்தான் நாம் இவ்வளவு நீண்ட காலம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டோம். அவர்களால்தான் பொதுமக்கள் கஷ்டப்படுகிறார்கள். மாநாட்டில் பங்கேற்ற சிலர் கிராமங்களில் ஒளிந்துகொண்டு, கரோனா தொற்று பரவ முக்கிய காரணமாக இருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தானாக முன்வராமல் இருந்ததுதான் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. அப்படிச் செய்திருந்தால் நூற்றுக்கணக்கானோரை கரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே முன்வந்து மருத்துவ வசதிகளைப் பெற்றிருக்கலாம். அரசம் அவர்களுக்கு உதவத் தயாராகவே இருந்தது.

டெல்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் ஜஃப்ருல் இஸ்லாம், தனது சொந்த நாட்டை விட்டுவிட்டுப் பிற நாடுகளின் உதவியை நாடியது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

சில போலி அறிவுஜீவிகள் நாட்டில் இஸ்லாமிய வெறுப்பு வாதத்தைப் பரப்பி இந்தியாவின் பிம்பத்தைச் சர்வதேச அளவில் தேசப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது. ஏனென்றால் இந்தியாவிலுள்ள மதச்சார்பின்மை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

இந்தியாவின் அடித்தளத்தை தேசப்படுத்த முயலும் இவர்களை உளவுத்துறை பார்த்துக்கொள்ளும். தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்த 'போலி அறிவுஜீவிகளின்' செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை கண்காணித்துவருகிறது" என்றார்.

மேலும், ஊரடங்கில் தற்போது படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது என்றும் தேவையான சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களை பறித்துச் சென்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.